2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ஓய்வு அறிவித்தல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் மீது மஹேல, சங்கா அதிருப்பதி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடர் நிறைவடைந்து இலங்கை திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரிகள், தமது ஓய்வு அறிவித்தல் தொடர்பில் நடந்து கொண்ட விதம் தங்களுக்கு அதிருப்தி அளித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு ஊடங்களும் காரணம் என கூறிய குமார் சங்ககார எனக்கு இப்போது வயது 37. இனி ஓர் உலக 20-20 தொடரில் விளையாட முடியாது. இதை தான் நான் அறிவித்தேன் என கூறினார். இந்த விடயங்கள் தொடர்பாக எம்முடன் பேசாமல், கலந்துரையாடாமல் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டமை அதிருப்தியையும் கவலையையும் அளிக்கிறது என மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார். எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் பழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சங்ககார தெரிவித்தார்.

உலக 20-20 தொடர் ஆரம்பமாக முன்னர் குமார் சங்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஓய்வு பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியா, இவர்கள் இருவரும் ஓய்வு தொடர்பில் தன்னுடனோ இலங்கை கிரிக்கெட் உடனோ பேசாமல் அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். இது தனக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தியதாக ஊடங்களில் தெரிவித்து இருந்தார். பின்னர் தான் அவர்கள் இருவருடனும் நீண்ட நேரம் உரையாடி இருந்தேன். போதியளவில் கருத்துகளை விளங்கிக் கொள்ளாமையே இதற்க்கான காரணம். இந்த பிரச்சினை இப்போது தீர்ந்து விட்டது என சனத் ஜெயசூரியா கூறியிருந்தார். இந்த நிலையில் நாடு திரும்பிய குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் தங்கள் கருத்துகளை ஊடகங்கள் மத்தியில் வெளியிட்டுள்ளனர்.

  Comments - 0

  • உமேஷ் ஸ்ரீனிவாசன் Monday, 14 April 2014 08:47 AM

    இளைஞர்களுக்கு வழி விட்டு உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெறுவது இருவருக்கும் பெருமை சேர்க்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X