2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தென் ஆபிரிக்காவை தொடர்ந்து இலங்கையில் பாகிஸ்தான்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள்ப் போட்டித் தொடர்கள் இலங்கையில் நடைபெறவுள்ளன. இலங்கையில் இந்த வருடம் எந்த கிரிக்கெட் போட்டிகளும் இல்லை என்ற நிலை இருத்த போதும், தென் ஆபிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையில் கைவிடப்பட்ட தொடரை மீண்டும் நடாத்த தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் அந்த தொடர் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகளும், 3 ஒருநாள்ப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்த தொடரை இரு கிரிக்கெட் சபைகளினதும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக 20-20 தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் இருந்த நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் சபை இந்த தொடருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இரு அணிகளும் 2014ஆம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--