2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஹைதராபாத்தை வென்றது ராஜஸ்தான்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஷிகார் தவான் 38 (34 பந்துகள், 4 ஓட்டங்கள் 3 , 6 ஓட்டங்கள் 1)  ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 32 (35 பந்துகள், 4 ஓட்டங்கள் ) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தவல் குல்கர்னி, கேன் ரிச்சட்சன், ரஜாட் பாத்தியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கையா ரெஹானே 59 (53 பந்துகள், 4 ஓட்டங்கள் 6) ஓட்டங்களையும், ஸ்டுவோர்ட் பின்னி 48 (32 பந்துகள், 4 ஓட்டங்கள் 4, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டைன், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக அஜிங்கையா ரெஹானே தெரிவு செய்யபட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--