2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இந்திய அணியுடனான போட்டிக்கான இங்கிலாந்து அணி

A.P.Mathan   / 2014 ஜூலை 03 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் விளையாடிய அதே அணியுடன் வேகப் பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் இணைக்கப்பட்டு 13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடனான தொடரில் பென் ஸ்டோக்ஸ் இணைத்துக் கொள்ளபப்டவில்லை. அந்த காலப்பகுதியில் டேர்காம் பிராந்திய அணிக்காக ஒரு போட்டியில் 10 விக்கெட்களைக் கைப்பற்றி சிறந்த பெறுதியை காட்டியதையடுத்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழல்ப் பந்துவீச்சாளர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. பகுதி நேர சுழல்ப் பந்துவீச்சாளரான மூயேன் அலி மாத்திரமே அணியில் உள்ளார். 
 
அணி விபரம் 
அலஸ்டயர் குக்(தலைவர்) சாம் ரோப்சன், கரி பலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மூயேன் அலி, க்றிஸ் ஜோர்டான், சடுவொர்ட் ப்ரோட்,லியாம் பிளங்கட், ஜேம்ஸ் அன்டர்சன், பென் ஸ்டோக்ஸ், க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .