2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கடித்த கால்பந்தாட வீரரின் தண்டனைக்கு மீள் முறையீடு

A.P.Mathan   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் உருகுவே வீரர் லூயிஸ் சொரஸ், இத்தாலி வீரர் ஜிஜியோ செய்லினி என்பவரை கடித்தார் என்ற குற்றத்தின் படி 4 மாதங்கள் சகலவித போட்டிகளில் இருந்தும், மைதானங்களுக்குள் நுழைவதில் இருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளார். 
 
குறித்த தடையை நீக்குமாறு கோரி உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனம், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் மீள் முறையீடு செய்துள்ளது. இதை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின்  ஒழுக்காற்று குழு தலைவர் கிளவ்டியோ சல்சர் உறுதி செய்துள்ளார். 
 
சொராஸ் மூன்றாவது தடவையாக இவ்வாறன சம்பவத்தில் ஈடுபட்டமையே இவரின் கடுமையான தண்டனைக்கு காரணம் என நம்பப்படுகின்றது. இவர் தடை செய்யப்பட்டதுடன் ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் அமெரிக்க டொலர்கள் தண்டமாகவும் அறவிடப்பட்டுள்ளது. இதுவரையும் லூயிஸ் சொரஸ், இத்தாலி வீரரிடம் பகிரங்க மன்னிப்பு எதனையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   
 
இந்த நிலையில் இங்கிலாந்து கழகமான லிவர்பூல் கழகத்தில் இருந்து ஸ்பானிய கழகமான பார்சிலோன கழகத்திற்கு வாங்கும் நடவடிக்கையும் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .