2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 22 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளுக்கும் அணித் தலைவர் டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராத் கோலி, முதல் மூன்று போட்டிகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு இருந்த அஷ்வின், மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ரிதிமன் சஹா விக்கெட் காப்பாளராக கடமையாற்றவுளார். புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கபப்ட்டுள்ளது. குலதீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வருண் ஆரோன் அணியில் சேர்துக்கொள்ளப்பட்டுள்ளார். உபாதையடைந்துள்ள ரோஹித் ஷர்மா, மோஹித் ஷர்மா ஆகியோரும் அணியில் இடம்பிடிக்கவில்லை. 
 
விராத் கோலியின் தலைமையில் சிகார் தவான், அஜின்கையா ரெஹானே, அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ரவீந்தர் ஜடேஜா, மொஹமட் சமி, வருண் ஆரோன், ரிதிமன் சஹா, முரளி விஜய், அக்சார் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் 15 பேர் கொண்ட குழுவில் இடம் பிடித்துள்ளனர். இந்த தொடரின் முதற்ப் போட்டி நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .