2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிரசாத்துக்கு பதிலாக துஷ்மந்த

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயம் காரணமாக உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத் விலகிக்கொண்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு 23 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர அழைக்கப்பட்டுள்ளார். 

இவர் இதுவரை ஒரேயொரு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் இவர் அறிமுகமாகி, 60 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். 

சமிந்த எரங்க அல்லது துஷ்மந்த சமீர ஆகிய இருவரில் ஒருவரைத் தெரிவுசெய்வது என்ற நிலையில், இளையவரும், வேகமாக பந்துகளை வீசும் ஆற்றலைக் கொண்டவருமான துஷ்மந்த தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த மாற்றம் தொடர்பான ஐசிசியின் உலகக் கிண்ணத்தொடருக்கான தொழிநுட்பக் குழுவின் அனுமதிக்காக இலங்கை அணி காத்திருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .