2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்கக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றுக்கான தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ§க்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்றிருக்காத ஏபி டி வில்லியர்ஸ், இத்தொடரில் இடம்பெற்றுள்ளதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியையும் வழிநடத்தவுள்ளார்.

சிரேஷ்ட வீரர்களான மோர்னி மோர்க்கல் மற்றும் ஜே.பி டுமினி இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவுள்ளதால், இருவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்குபற்ற மாட்டார்கள் என்பதோடு, இருபதுக்கு-20 தொடரில் மோர்னி மோர்க்கல் பங்குபற்ற மாட்டார்.

குழாம்:

ஒ.நா.ச.: ஏ.பி டி வில்லியர்ஸ், கைல் அபொட், ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டியன், ஃபப் டு பிளெஸிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், ஆரொன் ஃபங்கிசோ, வேர்ணன் பிலாந்தர், ககிசோ றபாடா, றீலி றோஸோ, டேல் ஸ்டெய்ன், மோர்னி வான் வைக், டேவிட் வியஸி.

இருபதுக்கு-20: ஃபப் டு பிளெஸிஸ்,

கைல் அபொட், ஹஷிம் அம்லா, ஃபர்ஹான் பெஹர்டியன், ஏ.பி டி வில்லியர்ஸ், ஜே.பி டுமினி, எடினி லீயி, டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், ஆரொன் ஃபங்கிசோ, ககிசோ றபாடா, றீலி றோஸோ, மோர்னி வான் வைக், டேவிட் வியஸி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .