2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

3 ஆவது ஆஷஸ் டெஸ்ட்டில் ஆஸி அணி 267 ஓட்டங்களால் வெற்றி

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 267 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதனால், 5 போட்டிகள் கொண்ட இத் தொடர் தற்போது 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளது.
பேர்த் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 391 ஓட்டங்கள் தேவையான நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்துஅணி, நேற்றைய ஆட்டமுடிவின்போது 5 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 4 ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அவ்வணி 123 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜொனதன் ட்ரொட்டின் 31 ஓட்டங்களே இங்கிலாந்து அணியின் சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் பெறப்பட்டஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும். அடுத்ததாக மட் பிரையோர் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில்  ரையன் ஹரிஸ் 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். மிட்சல் ஜோன்ஸன் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெல் ஹில்பென்ஹாஸ் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இத்தொடரின் 4 ஆவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி  மெல்போர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--