2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஆஸி. அணிக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பெங்களூரில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணிமுதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் 77 ஓட்டங்களைப் பெற்றார். ஷேன் வட்ஸன் 57ஓட்டங்களையும் சைமன் கட்டிச் மார்கஸ் நோர்த் ஆகியோர் தலா 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 100 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஸஹீர்கான் 61 ஒட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுரேஸ் ரெய்னா 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .