Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
UPDATE : இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சுவிஸ் தூதரக பணியாளரை கைதுசெய்யுமாறு உத்தரவு
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பணியாளர், அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில், தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று ஆஜரான நிலையில், அங்கொடை மனநல வைத்தியசாலை அனுப்பிவைக்கப்பட்டார்.
அதனையடுத்து, அங்கொடையில் இடம்பெற்ற மேலதிக பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.
குறித்த பணியாளரின் மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அந்த பணியாளர் வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் பணித்தமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago