Editorial / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
அவரது முதலாவது இலக்கு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகும். அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக திட்டமிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையில் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சம்பவத்துடன் சஹ்ரானுக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago