Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபாலவிடம் கொழும்பு குற்றவியல் பிரிவு மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக நீதிபதி தம்மிகா ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் இன்று (21)முன்னிலையாகியிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாடியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நீதிபதி கிஹான் பிலபிட்டிய மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க ஆகியோரிடம் கொழும்பு குற்றவியல் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
5 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago