Editorial / 2019 செப்டெம்பர் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொடை பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கு எரிவாயு சிலிண்டரே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமடகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (15) காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
57 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
28 Oct 2025