Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (20) சாட்சியமளித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சாட்சியங்களை பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, இதுவரையில் பெறப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய இறுதி அறிக்கை ஒக்டோபர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நேற்று (19) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025