2020 மே 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி  வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வகையில்  இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வந்த அனைத்து தெரிவுக்குழுக்களும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X