A.Kanagaraj / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
அப்பம், இடியப்பம், தேநீர் என்பன இலங்கை அரசியல் வரலாற்றில், இடம்பிடித்தவையாகும் என்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்பி பருகும் கோப்பியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பருகியுள்ளமை, சூடான அரசியலை சூடாக்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த 29ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்தச் சந்திப்பு, சுமார் நான்கு மணிநேரம், நள்ளிரவு 12 மணிவரையிலும் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அழைப்பின் பேரிலேயே அவ்விருவரும், வருகைதந்திருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதன் பின்னர், இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டமை இதுவே முதல்தடவையாகும்.
ஜனாதிபதியையும் பிரதமரையும், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனைவி, சுஜாதா சேனாரத்ன, வெற்றிலை கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்பி பருகும் பிரேஸில் கோப்பியை, பிரதமருக்கு வழங்கினார். அமைச்சர் ராஜிதவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு சென்ற பல தடவைகளும், பிரேஸில் கோப்பியையே பருகியுள்ளார்.
அதேபோல, இம்முறை ஜனாதிபதியும், பிரேஸில் கோப்பியையே பருகியுள்ளார் எனத் தகவல் தெரிவிக்கின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் அன்றையதினம் இராப்போசனத்தை முடித்துக்கொண்டே திரும்பியுள்ளனர்.
22 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
3 hours ago