Editorial / 2020 ஜூலை 10 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, இந்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், எமில்காந்தன், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோர் இவ்வாறு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி பிணை வழங்கியிருந்தது.
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago