Editorial / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட தெரிவுக்குழுவினை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago