Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்லாமா இக்பால் நினைவு தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ், உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய ஊடக பொறுப்பாளர் தாவூத் எதிஸாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அல்லாமா இக்பால் ஞாபகர்த்த தினத்தை முன்னிட்டு மும்மொழிகளிலும் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்வில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இலங்கை-பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியம் அல்லாமா இக்பால் நினைவு தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Pix By: Kushan Pathiraja)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .