2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

இங்கிலாந்துக் குழாமில் போக்ஸ், ஜெனிங்ஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கீட்டன் ஜெனிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து இறுதியாக விளையாடிய தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ மேற்படி குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதுதவிர, சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி தொடர்ந்தும் டெஸ்ட் தெரிவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத நிலையில் அவரும் குழாமும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு வரும் ஜேம்ஸ் அன்டர்சனும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதேவேளை, உடல்நிலை சரியில்லாமை காரணமாக தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரிலிருந்து பாதியிலேயே விலகியிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவருடன் டொம் பெஸ், மற் பார்க்கின்ஸன் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக் குழாமை நிரப்புகின்றனர்.

இந்நிலையில், அண்மைய காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகச் செயற்பட்டிருந்தபோதும் விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் குழாமில் தொடருகின்றார்.

குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), டொம் பெஸ், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், ஸக் க்றோலி, சாம் கர்ரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ், ஜேக் லீச், மற் பார்க்கின்ஸன், ஒலி போப், டொம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .