Editorial / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
கிண்ணியா மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான தேவையாக இருந்த, குறிஞ்சாக்கேணி கடல் நீர்ப்பரப்பில் பயணிப்பதற்கான படகுப்பாதையான "கங்கை" என்ற பெயரிடப்பட்ட பாரிய படகு பாதையின் பயணம்,பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்ராவால் திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2021 நவம்பரில்பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டு விலைமதிப்பற்ற உயிர்களை காவு கொண்ட துயரமான கிண்ணியா படகு விபத்துக்குப்பின்னர் தற்போது இப்படகு பாதை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள "கங்கை" என்ற இப்புதிய படகுப்பாதை,சவுதி அரேபிய அரசின் 1.05 பில்லியன் நிதியுதவியுடன் இவ் கடற்பகுதியில் கட்டப்படவுள்ள நிரந்தர பாலம் கட்டுமான நிர்மாணத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இப்படகுப் பாதை 45 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
டால்பின் மரேன் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் எட்வர்ட் & கிறிஸ்டி (பிரைவேட்) லிமிடெட் என்ற இரண்டு தனியார் கம்பனிகளின் கூட்டு முயற்சியாக நிர்மாணிக்கப்பட்ட இந்தப் படகு பாதை, நவீன பொறியியல் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு முழுமையான உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை கொண்டதாக உள்ளது.
நிகழ்வில் பேசிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர "திருகோணமலை மாவட்டம் மற்றும் கிண்ணியா பிரிவுகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற முறையில்,நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் உயிர் பெறுவதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.இது நமது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து முறையை உறுதி செய்கிறது.
இது வெறும் உள்கட்டமைப்புத் திட்டம் மட்டுமல்ல.நம்பிக்கையை மீட்டெடுப்பது,பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் இந்த நீர் நிலைகளைக் கடக்கும் ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவது உறுதிப்படுத்துகின்றது".
"நாம் முன்னேறும்போது,கடந்த காலத்தை நினைவில் கொள்கிறோம். எதிர்காலத்தை குறித்து சிந்திக்கின்றோம்.திருகோணமலை மாவட்டம் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும்,சிறந்த ஒருங்கிணைப்பிற்குரியதாகவும் அமைய வேண்டும்.மாவட்டத்தை அனைவருக்கும் சம வாய்ப்புகள் நிறைந்ததாக மாற்றுவதில் எமது அரசாங்கம் உறுதியாக இருக்கிறது" என்றார்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago