2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கையின் அண்மைய டெஸ்ட் போட்டியான, சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றிருக்காத தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப் ஆகியோரோடு, புதுமுக வீரராக, மலிந்த புஷ்பகுமார சேர்க்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் காரணமாக, முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் பங்குபற்ற மாட்டார் என்ற நிலையில், சந்திமாலின் இடத்தை, தனஞ்சய டி சில்வா எடுத்துக் கொள்கிறார்.

துஷ்மந்த சமீரவின் இடத்தில் நுவான் பிரதிப்பும், லக்‌ஷன் சந்தகானின் இடத்தில் மலிந்த புஷ்பகுமாரவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் மலிந்த, உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், சர்வதேசப் போட்டிகளில் இதுவரை வாய்ப்புப் பெறாதவராக இருந்துவந்தார். தற்போது, தனது 30ஆவது வயதில், இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில், இலங்கை அணியின் தலைவராக, ரங்கன ஹேரத் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழாம்: ரங்கன ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், அசேல குணரட்ன, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வா பெர்ணான்டோ, மலிந்த புஷ்பகுமார, நுவான் பிரதீப்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .