Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இன்று (19) ஆரம்பமாக உள்ளன.
வருடாந்தம் இந்தியாவில் நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடர் இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல தடவைகள் பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்துவதென ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி இவ்வருடத்துக்காக போட்டித் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில் கடந்த வருடத்துக்கான போட்டித்தொடரை வெற்றிக்கொண்ட ரோஹிந்த சர்மா தலைமையிலான மும்மை இந்தியன்ஸ் அணியும், மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி, மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், 52 நாள்களாக இடம்பெறும் இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வெளியில் நடத்தப்படுவதுடன், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய பொதுத் தேர்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026