2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் டொட்டமுண்ட் – மைன்ஸ் போட்டி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 17 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், மைன்ஸுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை தோமஸ் மெனியர் பெற்றதோடு, மைன்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை லெவின் ஒஸ்டுனாலி பெற்றிருந்தார்.

இந்நிலையில், வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்.பி லெய்ப்ஸிக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. லெய்ப்ஸிக் சார்பாக, நொர்டி முகிலே, வில்லி ஓர்பன் ஆகியோர் தலா ஒவ்வ்வொரு கோலைப் பெற்றதோடு, வொல்வ்ஸ்பேர்க் சார்பாக வூட் வெஹொர்ஸ்ட், றெனட்டோ ஸ்டெஃபென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .