2020 ஜூன் 06, சனிக்கிழமை

சிம்பாப்வேயை வெள்ளையடித்தது தென்னாபிரிக்கா

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என அவ்வணியை தென்னாபிரிக்கா வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, பார்ளில் நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என சிம்பாப்வேயை வெள்ளையடித்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷோன் வில்லியம்ஸ் 69 (79), பிரெண்டன் டெய்லர் 40 (44) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேல் ஸ்டெய்ன், கஜிஸோ றபாடா ஆகியோர் தலா 3, இம்ரான் தாஹீர், அன்டிலி பெக்லுவாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 229 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 45.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், றீஸா ஹென்ட்றிக்ஸ் 66 (82), ஹென்றிச் கிளாசென் 59 (67), ஏய்டன் மர்க்ரம் 42 (40) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டொனால்ட் ட்ரிபானோ 2, கைல் ஜார்விஸ், பிரென்டன் மவுட்டா, ஷோன் வில்லியம்ஸ், டென்டாய் சட்டாரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக ஹெய்ன்றிச் கிளாசெனும் தொடரின் நாயகனாக இம்ரான் தாஹீரும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X