2019 டிசெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

தொடரை 2-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, அடிலெய்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 589/3 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 335, மர்னுஸ் லபுஷைன் 162, மத்தியூ வேட் ஆ.இ 38, ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/88)

பாகிஸ்தான்: 302/10 (துடுப்பாட்டம்: யசீர் ஷா 113, பாபர் அஸாம் 97, மொஹமட் அப்பாஸ் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 6/66, பற் கமின்ஸ் 3/83, ஜொஷ் ஹேசில்வூட் 1/48)

பாகிஸ்தான்: 239/10 (துடுப்பாட்டம்: ஷண் மசூட் 68, அசாட் ஷஃபிக் 57, மொஹமட் றிஸ்வான் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/69, ஜொஷ் ஹேசில்வூட் 3/63, மிற்செல் ஸ்டார்க் 1/47)

போட்டியின் நாயகன்: டேவிட் வோணர்

தொடரின் நாயகன்: டேவிட் வோணர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .