2020 மே 29, வெள்ளிக்கிழமை

வெஸ்ட் ஹாமை வென்றது ஆர்சனல்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஆர்சனல் வென்றது.

இப்போட்டியின் 38ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் பப்லோ ஃபொர்னால்ஸிலிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களவீரர் அஞ்செலோ ஒக்பொன்னா, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

எனினும், போட்டியின் 60ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக பின்களவீரர் சியட் கொலைஸக்கிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ஆர்சனலின் முன்களவீரர் கப்ரியல் மார்டினெல்லி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

அடுத்த ஆறாவது நிமிடத்தில், அணித்தலைவரும் சக முன்களவீரருமான பியரி-எம்ரிக் அபுமெயாங்கிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ஆர்சனலின் இன்னொரு முன்களவீரரான நிக்கொலஸ் பெப்பே தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதையடுத்த மூன்றாவது நிமிடத்தில், நிக்கொலஸ் பெப்பேயிடமிருந்து பெற்ற பந்தை பியர்-எம்ரிக் ஒபமெயாங்க் கோலாக்கியதோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X