2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

15 ஆண்டுகள் இருக்க மொரின்யோ திட்டம்

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, 15 ஆண்டுகளுக்கு இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஜொஸே மொரின்யோ, இதற்கு முன்னர் சேர் அலெக்ஸ் பேர்குசனின் காலத்தில் காணப்பட்ட உறுதியை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பேர்குசனின் காலத்தின் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளர் பதவிகள், அடிக்கடி மாற்றமடைந்து வருகின்றன. இந்நிலையிலேயே, தனது 2ஆவது பருவகாலத்திலேயே, நீண்டகாலத் திட்டத்தை, மொரின்யோ வெளிப்படுத்தியுள்ளார்.

முகாமையாளர்களின் பணிகள் தொடர்பாகக் காணப்படும் அழுத்தம் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு இருப்பது கடினமென்பதை ஏற்றுக் கொண்ட மொரின்யோ, எனினும், அணி வெற்றிபெறும் போது, அது சாத்தியமாகுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .