2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இறுதிப்போட்டிக்கு படையெடுக்கும் பொலிவூட் நட்சத்திரங்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னமும் ஒருசில மணிநேரத்தில் ஆரம்பிக்கவிருக்கும் 19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் இறுதிப் போட்டியினைக் கண்டுகளிப்பதற்காக மும்பை திரையுலகினர் பலர் சொக்கர் சிற்றியில் கூடியிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் தென்னாபிரிக்கா சென்றிருந்தார். அவரினைத் தொடர்ந்து சஞ்சை தத், இம்ரான் கான், அனில்கபூர் ஆகியோரும் சென்றிருந்தனர். சஞ்சை தத் தனது கர்ப்பிணி மனைவியுடன் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியினை பார்வையிட சென்றிருக்கின்றமை முக்கிய அம்சமாகும். இதேவேளை இறுதி நேரத்தில் ஓர் அவசர வேலை நிமிர்த்தமாக தனது முடிவினை மாற்றியிருக்கிறார் அனில் கபூர். சொக்கர் சிற்றியில் ஆசனத்தினை ஒதுக்கி வைத்திருந்தும் தன்னால் இறுதிப் போட்டியினை நேரடியாக பார்க்க முடியவில்லை என அவர் வருத்தப்படுகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X