2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர் ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ள தொடரில் இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் சகீர் கான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே சகீர் கான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

மகேந்திர சிங் டோணி, டங்கன் ஃபிளெற்சர், தேர்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான குழாம்கள் அறிவிக்கப்பட்டன.

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுவென்டி டுவென்டி: மகேந்திரசிங் டோணி, கௌதம் கம்பீர், அஜின்கியா ரஹானே, யுவ்ராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அஷோக் டின்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், பர்வீந்தர் அவானா, பியூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு

ஒருநாள் குழாம்: மகேந்திரசிங் டோணி, விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், அஜின்கியா ரஹானே, யுவ்ராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அஷோக் டின்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஷமி அஹமட், அமித் மிர்ஷா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .