2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவசரக் கூட்டம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவசர கூட்டம் ஒன்றை எதிர்வரும் 20ஆம் திகதி அறிவித்துள்ளது. இந்த கூட்டம் தொழிற்பாட்டு நிர்வாக சபைக் கூட்டமாக அமையவுள்ளது. மாநில கிரிக்கெட் சபைகளின் வேண்டுகோளை தொடர்ந்து இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையிலேயே மாநில கிரிக்கெட் சபைகள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் இந்த கூட்டத்தில் நிகழும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஸ்ரீனிவாசன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து ஐ.பி. எல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிர்வாகிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதேவேளை சுனில் கவாஸ்கர் இந்த கூட்டத்தில் பங்கெடுப்பதா, இல்லையா என்ற குழப்பங்கள் நிலவுகின்ற போதும் அவர் பங்கேற்ப்பார் என்றே தெரிய வருகின்றது. நீதிமன்றினால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--