2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிராம ராஜ்ய திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.

இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஒரு வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு, அந்த அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒவ்வொரு திட்டத்துக்கும் ரூபாய் 15 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தெரிவு செய்யும் கூட்டம், காத்தான்குடி, முதலாம் குறிச்சி ஸாவியா பாடசாலை மண்டபத்தில் இன்று(30) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டவுள்ள திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் வீதி நிர்மாணம், பல நோக்கு மண்டபம் அமைத்தல் பாடசாலைகளில் மலசல கூடங்கள் அமைத்தல், கிராம மட்டத்தில் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .