2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவால் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிர்வகிக்கப்படும் கிராமங்களை ஏறாவூர்ப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுடன் இணைப்பதற்கு எடுக்கும்; நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிராந்திய சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பணித்துள்ளார்.

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவால் பராமரிக்கப்படுகின்ற மீராகேணி, மிச்நகர், ஐயன்கேணி ஆகிய கிராமங்களை ஏறாவூர்ப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் கொண்டுவருவதற்கு சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ஆட்சேபித்து, மாகாண சுகாதார அமைச்சருக்கு ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் அனுப்பியிருந்தது.

அக்கடிதத்தில், ஏறாவூர் நகர சுகாதார அதிகாரி பிரிவு நிர்வாகத்தின் கீழுள்ள மேற்படி கிராமங்களை ஏறாவூர்ப்பற்று சுகாதாரப் பணிமனை நிர்வாகத்தின் கீழ் இணைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையை கைவிடுவதற்கு அறிவுறுத்துமாறு சம்மேளனம்  கேட்டிருந்தது.

இந்த விடயம் குறித்தே விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பணித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .