2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி, மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை முன்பாக நேற்று (25) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறித்த ஆசிரியர் பாட நேரங்களில், வகுப்பறைகளில் பத்திரிகை, அலைபேசி பார்ப்பதாகவும், கல்வி கற்பிக்கும் நேரத்தில் மாணவர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதால் பிள்ளைகள் வீட்டில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக, பெற்றோர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியரின் நடவடிக்கை தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தோடு, ஆசிரியர், பாடசாலை நிர்வாகத்தினரை மிரட்டி வைத்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கல்வி வலய உயர் அதிகாரிகள் உட்பட்டோர் வருகை தந்து, பெற்றோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது, மேற்படி ஆசிரியரை தற்காலிகமாக நேற்று (25) முதல் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், இவரது நிரந்தர இடமாற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .