Administrator / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளரை தாக்கி காயமேற்படுத்திய சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று 6ஆம் குறிச்சி அம்பாறை வீதியில் உள்ள தேனீர் கடை ஒன்றில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை கடந்த மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் மாற்று கட்சி ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கிலக்கான நபர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மெற்கொண்ட பொலிஸார் தலைமறைவாக இருந்தவரில் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்தனர்.
கைது செய்தவரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலைமறைவாக இருந்த மற்றைய இருசந்தேக நபர்களும் சட்டத்தரணி ஊடாக மன்றில் சரணடைந்தனர்.
5 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
32 minute ago