Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 14 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (14) காலை இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
நுவரேலியாவிலுள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 64 பேரில் ஏற்கெனவே மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .