2021 மே 12, புதன்கிழமை

ஆயுதம் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஆயுதம் வைத்திருந்த ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு  மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசித்துவந்த இவர் ஆயுதங்கள் வைத்திருந்ததாக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.  இவரிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 29 ரவைகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

விளக்கமறியலில் இருந்துவந்த மேற்படி  நபர் பத்து மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
 
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமையன்று இவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனையை  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி  வழங்கி தீர்ப்பளித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .