Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில், விழிப்புலன் அற்ற தம்பதியின் இரட்டைப் பிள்ளைகள், உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்தமையைக் கௌரவிக்கும் நிகழ்வு, கல்லடி, நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையால் நடத்தப்பட்டது.
மேற்படி விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத் தலைவருமான அ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணத் திணைக்கள பிரதம கணக்காளர் ஆ.உதயராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வல் கௌரவ அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி, கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் விழிப்புலனற்ற தம்பதியினரின் இரட்டைப் பிள்ளைகளான தயராஜன் தனுஜன், இதயராஜன் அனுஜன் ஆகியோர், கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இருந்து கணிதப் பிரிவில் தோற்றிய நிலையில், தனுஜன் மாவட்ட மட்டத்தில் 06ஆம் இடத்தையும் அனுஜன் 18ஆவது இடத்தையும் பெற்று, பொறியியல் துறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, திருகோணமலை ரொட்டறிக் கழகத்தினரால் சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான விழிப்புலனற்றோருக்கான கற்றல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
50 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago