Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள உணவகம் இரண்டுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
வியாழக்கிழமை(19) இரவு மஞ்சந்தொடுவாய் பகுதியில் உணவகம் ஒன்றில் உணவுபெற்றுச் சென்றவர் திடீர் நோய்வாய்ப்பட்பட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று நாவற்குடா பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அரவிந்த் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான எஸ்.அமுதமாலன்,ஜெய்சங்கர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, சுகாதார மற்ற வகையில் உணவு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் இருந்தமை தொடர்பில் இரண்டு உணவகத்துக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த இரண்டு உணவகம் இரண்டில் ஒரு உணவகத்துக்கு எதிராக நான்கு வழக்கும் ஒரு உணவகத்துக்கு எதிராக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது நான்கு வழக்குக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் மற்றைய வழக்குக்கு 10ஆயிரம் ரூபாவும் நீதிவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026