2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இரு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகர சபை பிரிவில் வடிகானுக்குள்  கழிவுநீரை விட்டு வடிகானை அசுத்தப்படுத்திய இரண்டு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் படி காத்தான்குடி நகர சபை அபராதம் விதித்துள்ளதாக நகர சபை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு ஹோட்டல்களின் கழிவுநீரை  காத்தான்குடி பிரதான  வீதியிலுள்ள வடிகானுக்கு விட்டதால் வடிகான் அசுத்தமடைந்து துர் நாற்றம் வீசத்தொடங்கியமை தொடர்பில் நகரசபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகானை காத்தான்குடி நகர சபையின் சுகாதார ஊழியர்கள் துப்புரவு செய்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .