Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசனின் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள இமாம்கள் மற்றும் முஅத்தீன்களுக்கான இலவச உம்றா திட்டத்துக்குரிய ஆவணங்கள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்டன.
இதன்போது, முதற்கட்டமாக நூறு பேருக்கு ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் நாடு பூராகவுமுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 500 இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் இலவசமாக உம்றாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்காக உதவ சவூதி அரேபியத் தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் 28ஆம் திகதி முதலாவது 100 பேர் கொண்ட இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் அடங்கிய குழு மக்காவுக்கு பயணமாக உள்ளது. எதிர்வரும் மே மாதத்துக்குள் 500 பேர் இத்திட்டத்தின் மூலம் உம்றாவுக்காக மக்காவுக்கு செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

7 hours ago
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
08 Dec 2025