Suganthini Ratnam / 2016 மார்ச் 03 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் பகல் உணவாக புரியாணி உட்கொண்டபோது ஏற்பட்ட ஒவ்வாமைக்கு சல்மனல்லா என்ற கிருமித்தாக்கமே காரணமென அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த 19ஆம் திகதி மேற்படி பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில்; பகல் உணவாக புரியாணி உட்கொண்டவர்களில் 82 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த புரியாணியின் மாதிரி கொழும்பு, பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அந்த உணவின் கோழி முட்டையிலும் கோழி இறைச்சியிலும் சல்மனல்லா என்ற கிருமித்தாக்கம் காணப்பட்டதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த உணவகத்தை காத்தான்குடி சுகாதார அலுவலகம் மற்றும் காத்தான்குடி நகரசபை என்பன மூடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
21 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago