2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியல்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  கைதான 13  பேரையும் மீண்டும்  14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, கல்முனை நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில் இன்று (26) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள்  7  பேராகவும் 6 பேராகவும் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள்  அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு, பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி, பல  மாதங்களுக்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை  அடுத்த வழக்கு தவணையை,  டிசெம்பர் 10 ஆம்  திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .