2021 மே 06, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை கிழக்கு ஊடகவியலாளர்களின் ஒன்றியம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், ஊடக நெறிமுறைகள், ஊடகம் புகைப்பட நெறிமுறைகள், முரண்பாட்டிலிருந்து மீளும் நிலையில் ஊடகங்களின் பொறுப்பு, பிரஸ் கவுன்சில் மற்றும் ஒழுங்குவிதிகள், அவதூறு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

இந்த ஊடகச் செயலமர்வில்  பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் easternpressclubShgmail.com   என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தங்களது சுயவிபரக்கோவைகளுடனான விண்ணப்பங்களை அனுப்பி பங்குபற்றலுக்கான உறுதிப்படுத்தல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .