Niroshini / 2016 மார்ச் 22 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
ஊழியர்கள் வைத்தியர்களின் கடமைகளைச் செய்யவரக்கூடாது. ஊழியர்கள் ஊழியர்களின் கடமைகளை மாத்திரமே செய்யவேண்டும். அவ்வாறு இடம்பெறாது போனால் அதனால் ஏற்படும் விளைவுகளை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (21) இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதன் பொருட்டு சமூக, பொருளாதார, உளவள, ஆன்மீக மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் அர்ப்பணிப்புடன் சகல வைத்தியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து தங்களுக்னெவென்று பணிக்கப்பட்டுள்ள கடமைகளில் தங்களின் கடமைகளை சரிவரச் செய்வதன் மூலமே ஒரு சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முடியும்.
அத்துடன், பால்நிலை தொடர்பான வன்முறையைக் குறைப்பதற்கு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் போன்றவற்றுடன் அது தொடர்பிலான சட்டங்களையும் அடிக்கடி மக்கள் மத்தியில் விளக்கிவருவதனால் எதிர்காலத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் எல்லா உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
அதுமாத்திரமல்லாமல், பாத்திக்கப்பட்ட நபர்களுக்கு அவசர சிகிச்சையளித்தல், உதவிகள், பாதுகாப்பு வழங்கள், சட்ட உதவிகள், உளவள ஆலோசனைகள் வழங்கள் போன்றவற்றுடன் தேவைகளுக்கேற்ப ஏனைய நிறுவனங்களின் ஊடாக கல்வி, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சகலரும் செயற்பட்டால் மாத்திரமே ஒரு சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.
23 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
46 minute ago