Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பழைய பொதுச்சந்தையை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 12 கோடி ரூபாயை நகர அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்தச் சந்தையானது மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன், சந்தைக்குரிய அடிப்படை வசதிகளின்றியும் காணப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் நுகர்வோரும் இடநெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்தச் சந்தையின் புனரமைப்புத் தொடர்பில் நீண்டகாலமாக வியாபாரிகளும் நுகர்வோரும் உள்ளூராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் வந்திருந்தனர்.
இந்நிலையிலேயே இந்தச் சந்தையை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதற்கான புனரமைப்புப்பணி உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Jan 2021
16 Jan 2021
16 Jan 2021
16 Jan 2021