2021 மே 06, வியாழக்கிழமை

ஒளிக்கான பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

சகலருக்கும் கண் பார்வையை வழங்கும் 'ஒளிக்கான பாதயாத்திரை' மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது. இந்தப் பாதயாத்திரையை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால ஆரம்பித்து வைத்தார்.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்; மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிய இந்தப் பாதயாத்திரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் மாதம் 12ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

வசதி அற்றோருக்கு உதவ மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நடமாடும் கண் சத்திர சிகிச்சைப்பிரிவை தன்னகத்தே கொள்வது இதன் முக்கிய பணியாகும். நடமாடும் கண் சத்திர பிரிவை சுவீகரிப்பதன் மூலம் வருடத்துக்கு 5,000 பேருக்கு குருட்டுத்தன்மையை  தொலைதூர கண் சிகிச்சை முகாமினூடாக தவிர்க்கலாமென சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .