2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சா புகைக்கும் கருவியுடன் இளைஞர்கள் மூவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா புகைக்கும் கருவியுடனும் ஒரு தொகைக் கேரள கஞ்சாவுடனும், இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரிஆராச்சி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், காத்தான்குடி, புதிய காத்தான்குடி பிரதேசங்களில் இன்று (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென, பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

காத்தான்குடிப் பொலிஸார், இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X