2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
 
சுமார் ஒரு கிலோகிராம்; கஞ்சாவைக் கொண்டுசென்ற  குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை (23) மாலை மட்டக்களப்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் ஏறாவூர் நகர வீதி ஊடாக கஞ்சாப் பொதியை எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தச் சந்தேக நபர், நான்கு வருடங்களுக்கு முன்னர்  கந்தளாய்ப் பிரதேசத்தில் கஞ்சாப் பொதியை எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .